James Chow for Ward 23

Improve. Make it work.

சுருக்கம்

அக்டோபர் 22, திங்கள் அன்று
வாக்களியுங்கள்

James Chow

நகர கவுன்சிலர், வார்டு 23

மேம்படுத்துவோம். அதனை பணி புரியச் செய்வோம்.

நான் எனது பதின்பருவத்தில் இருந்தபோது கனடா வந்தேன். நான் யுனிவர்சிட்டி ஆஃப் டொராண்டோவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன், மேலும் நான் ரியல் எஸ்டேட், நிதி நிர்வாகம், தொழிலக பொறியியல் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துள்ளேன்.

டொராண்டோவில் நான் 46 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். நமது நகரம் நல்ல நிலையில் இருப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வம் உள்ளது. உயர்நிலைப் பள்ளி படிக்கும்போதிருந்து பல்வேறு வகைகளில் சமூகப்பணிகளில் நான் பங்கெடுத்து வருகிறேன். இந்த நகரத்தைப் பற்றிய என்னுடைய அறிவு மற்றும் ஈடுபாடு இவற்றுடன் இந்த வார்டை அனைவரும் வாழ, வேலை செய்ய மற்றும் வணிகம் செய்ய விரும்பும் ஒரு அழகிய இடமாக உருவாக்குவேன்.

நான்

  • • தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சம்பள அதிகரிப்பானது பாரபட்சமில்லாத மூன்றாவது தரப்பினால் மதிப்பாய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்படவேண்டும் என்று ஒரு தீர்மானத்தை முன்வைப்பேன்.
  • • பொது ஒப்பந்தங்களின் செயல்முறை வெளிப்படையானதாக, நியாயமானதாக மற்றும் ஒழுங்காக நிர்வகிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வேன்.
  • • வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் குறைந்த அல்லது செயல்பாடு அல்லாத நகர சொத்துக்களை வளர்த்தெடுக்கவும் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க உதவுவேன்.
  • • நமது தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை ஆதரிக்க, வாழ்வதற்கு ஆரோக்கிடமான இடத்தை உருவாக்க நகரின் உள்கட்டமைப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட ஆவன செய்வேன்.
  • • லைன் 4 மற்றும் வருங்கால ஸ்கார்பாரோ சென்டர் சப்வே நிலையம் இவைகளை இணைக்க ஒரு லூப் வேண்டுமென்று முன்மொழிவேன். முன்பு 2013 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தபடி ஸ்கார்பாரோ சப்வே லைன் ஷெப்பர்ட் மற்றும் மெகாவனுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.
  • • எங்கள் பொது இடங்களில் மெருவானா உள்ளிட்ட மருந்துகளின் பயன்பாடு கட்டுப்படுத்த ஒரு துணைவிதியை முன்வைப்பேன்.
  • • நமது பொது வசதிகளை மேம்படுத்தி நமது குடியிருப்போரின் தேவைகளைக் கவனத்தில் கொண்டு நல்ல சேவையை வழங்குவதன் மூலம் அண்டை அயலாரை பங்கேற்பை ஈடுபடுத்துவேன் மேலும் வலுப்படுத்துவேன்.

எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

மின்னஞ்சல்:

ஃபோன்: